கரூரில் அருள்மிகு மாரியம்மனுக்காக அலகு குத்தி அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்!

கரூர்: கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

கரூரில் ஜவஹர் பஜாரில் அருள்மிரு மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் இதுவும் ஒன்று.


ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, அமராவதி நதிக்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இன்று, நாளை, நாளை மறு நாள் என மூன்று நாட்கள் வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும்.

இதில் இன்றும் நாளையும் பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தி அக்னிசட்டி எடுத்து வருவர். நாளை மறுநாள் (மே30) ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடைபெறும்.

இந்த திருவிழாவிற்கு திருச்சி, மதுரை, சேலம், சென்னை போன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்களும், பொது மக்களும் திரண்டுள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாரியம்மனை காணும் வகையில் தரிசனம் செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் வழி நெடுக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று பொது மக்களின் தேவை அறிந்து செய்த கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமாருக்கு கரூர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதே போல, சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பொது மக்கள் கலந்து கொள்ளும்  திருவிழாஎன்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு தேவை என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment