Showing posts with label Happy Life. Show all posts
Showing posts with label Happy Life. Show all posts

கொஞ்சம் பழைய சோறும், ரெண்டு பச்சை மிளகாயும்: 100 வயது 'அழகி' மீனம்மாளின் ஆரோக்கிய ரகசியம்!

நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். இன்றைய ஃபாஸ்ட் புட் காலத்தில் எத்தனை பேர் நூறு ஆண்டு காலம் வாழ முடிகிறது?.

35 வயதிற்கு மேல் ஆகிவிட்டாலே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவைகள் தாக்கி உடலானது நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. கிராமங்களில் இன்றைக்கும் நூறு வயதுவரை வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆரோக்கியத்திற்காக அவர்கள் பெரிதாக எதுவும் மெனக்கெடுவதில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைக்கும் உணவை உண்டுவிட்டு இருப்பதே ஆரோக்கியத்தின் ரகசியம் என்கின்றனர் அவர்கள். 103 வயதாகியும் எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழும் மீனம்மாள் பாட்டி சொல்லும் ஆலோசனையை படியுங்களேன்.

உடல் ஆரோக்கியத்திற்காக தனியாக என்றும் எதையும் செய்யத்தேவையில்லை எந்த உணவு கிடைகிறதோ அதை நன்கு பசிக்கும் போது உண்டாலே போதும் அப்பொழுதுதான் உண்ணும் உணவு ஜீரணமாகும் என்கின்றார் பாட்டி.

மூன்று வேளையும் கட்டாயம் உணவு உண்டே ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நினைவு தெரிந்த நாள் முதலே மீனம்மாள் பாட்டி இரண்டு வேளைதான் உட்கொள்கிறாராம்.

காலை நேரத்தில் பழைய சோறு போட்டு அதில் நீராகாரம் ஊற்றி லேசாக உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடுவது விருப்பமான உணவு. பழைய கஞ்சிக்கு பச்சை மிளகாய்தான் காம்பினேசன். அதேபோல் மத்தியான நேரத்திலும் எளிமையான உணவுதான். பருப்பு சாதம், அல்லது காய்கறி சாம்பார், கீரை என கிடைக்கும் உணவுகளை உட்கொள்வதாக கூறுகிறார். இருவேளை உணவுதான் இரவு உணவு என்பது கிடையாது. அதனால்தான் உடம்பு லேசாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறதாம்.

வடை, பஜ்ஜி, மிக்சர், சேவு என எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள் எதையும் இதுவரை தொட்டு கூட பார்த்ததில்லை என்கிறார் இந்த பாட்டி. அதனால்தான் இதுவரை உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்லை என்கிறார்.

நல்லதை மட்டுமே நினைப்பேன். என் வாழ்நாளில் இதுவரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் நினைத்ததில்லை என்கிறார். நல்ல எண்ணங்கள் உருவாகும் இதயத்தில் இறைவன் குடியிருப்பான் என்பார்கள். அதனால்தான் எனக்கு எந்த நோய் நொடியும் வராமல் ஆண்டவன் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறான் என்கிறார் நூறாண்டுகளை கடந்த ஆரோக்கிய பாட்டி.

நம்மால் பழைய சோறு சாப்பிட முடியாததுதான் ஆனால் எண்ணெய் பலகாரம் சாப்பிடாமல் இருக்க முடியும். பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருக்கலாம் இல்லையா? ஏனெனில் எண்ணம் போல் வாழ்வு என்று சும்மாவா சொன்னார்கள்.

கரூரில் அருள்மிகு மாரியம்மனுக்காக அலகு குத்தி அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்!

கரூர்: கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

கரூரில் ஜவஹர் பஜாரில் அருள்மிரு மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் இதுவும் ஒன்று.


ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அழகு குத்தி அக்னி சட்டி எடுக்கும் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, அமராவதி நதிக்கரையில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இன்று, நாளை, நாளை மறு நாள் என மூன்று நாட்கள் வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும்.

இதில் இன்றும் நாளையும் பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தி அக்னிசட்டி எடுத்து வருவர். நாளை மறுநாள் (மே30) ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடைபெறும்.

இந்த திருவிழாவிற்கு திருச்சி, மதுரை, சேலம், சென்னை போன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்களும், பொது மக்களும் திரண்டுள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாரியம்மனை காணும் வகையில் தரிசனம் செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் வழி நெடுக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று பொது மக்களின் தேவை அறிந்து செய்த கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமாருக்கு கரூர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதே போல, சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பொது மக்கள் கலந்து கொள்ளும்  திருவிழாஎன்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு தேவை என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கை தட்டுங்க எந்த நோயும் எட்டிப்பார்க்காது!

கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கை தட்டி ரசியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

நம் நாட்டில் 1 மணி நேரத்தில 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதயநோய் பாதிப்பிற்கு ஆளாவதில் உலகத்திலேயே இந்தியர்கள்தான் முதலிடம் வகிக்கின்றனர். இதற்குக்காரணம், நம் வாழ்க்கை முறை. நல்ல வருமானம் கிடைத்து, வசதி இருந்தாலும் மன அமைதி இல்லாததால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்தியர்களுக்கு நோய் ஏற்பட உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்கள்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

மகிழ்ச்சியின் திறவுகோல்

இதயநோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம்தான். அதனால்தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் அனைத்தையும் சாதாரணமா எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பதுதான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். 

அக்குபிரசர்

கை தட்டுவதே ஒரு சிகிச்சைதான். கை தட்டும்போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள். மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

எலும்பு புற்றுநோய்

தைவான் நாட்டில் கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்றுநோயினை குணப்படுத்தியுள்ளனர். எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் திபெத் சென்று தலாய்லாமா வை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர் 20 நிமிடங்களுக்கு கைகளை சேர்த்து வைத்து தட்டச் சொன்னார். அதேபோல் தினசரி அரை மணிநேரம் இந்த பயிற்சியை மேற்கொள்ளச் சொன்னார். ஆச்சரியப்படும் வகையில் அவரது எலும்பு புற்றுநோய் குணமானது.

நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.

சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கைமுறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். 99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

காசா? பணமா? கை தட்டித்தான் பாருங்களேன்.

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!

காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும்.


அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.


கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும், கடவுளை நம்பு வேறு யாரையும் நம்பாதே, என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல கணவன் மனைவி வருவார்கள் என்று சொல்லலாம்.


மேலும் அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.


காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.


என்ன நண்பர்களே, உங்கள் நண்பர்களது மனநிலையை மாற்ற ரெடியா!!!

டென்ஷனில்லாம ஹாப்பியா இருக்க ஆசையா?

டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும்.


அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா?


உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.

”மறப்போம் மன்னிப் போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது.


அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.


தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும். 


என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க! வாழ்க்கை வாழ்வதற்கே!