பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆண்கள் என்றால் சினிமா கதாநாயகனைப் போல் ‘சிக்ஸ்பேக்‘ வைக்கவும், பெண்கள் கட்டழகு பெறவும் ஜிம் செல்வார்கள். கட்டழகைப் பெற அவர்கள் ஜிம்மில் பெரிய எடையைத் தூக்கி பயிற்சி செய்வர். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடா மெக்மாஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தசைகள் உருவாக்கத்தில் பெரிய எடைகளை விட, சிறிய எடைகள் அதிக பலன் தருகின்றன என்கின்றனர். வழக்கமாக செய்யப்படும் தீவிர பயிற்சிக்குப் பதிலாக, அதிக நேரம் சிறிய எடையைத் தூக்குவது, தசை உருவாக்கச் செயல்பாட்டைத் தூண்டி அதிக தசைகள் உருவாக வைக்கும் என்று இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரான நிக்கோலஸ் பர்ட் கூறுகிறார்.
இதற்குக் காரணம் அதிக எடை தூக்குபவர்கள் அப்பயிற்சியை சிறிது நேரமே செய்ய முடியும் என்பதால் ஜிம் நேரம் சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஆனால் சிறிய எடையைத் தூக்கினால் அதிக நேரம் ஜிம்மில் இருக்க வேண்டியிருக்கும். குறைந்த நேரம் அதிக எடையைத் தூக்குவதை விட, அதிக நாட்கள் குறைந்த எடையைத் திரும்பத் திரும்ப தூக்குவதால், தசை உருவாக்கத் தூண்டல் பல நாட்கள் நீடிக்கும். எனவே நீண்ட நாட்கள் அழகாக இருக்கவும் முடியும்.
ஆகவே கஷ்டப்படாமல் புத்திசாலித்தனமாக எடை தூக்குங்க!
No comments:
Post a Comment