காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!!
தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புதினா,மல்லி - சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 3
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும் நறுக்கி, அதனுடன் தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, அதில் காளானை போட்டு அலசி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, புதினா, மல்லி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
பிறகு அந்த காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
இப்போது சுவையான சத்தான காளான் குருமா ரெடி!

No comments:
Post a Comment