காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!

காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும்.


அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.


கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும், கடவுளை நம்பு வேறு யாரையும் நம்பாதே, என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல கணவன் மனைவி வருவார்கள் என்று சொல்லலாம்.


மேலும் அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.


காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.


என்ன நண்பர்களே, உங்கள் நண்பர்களது மனநிலையை மாற்ற ரெடியா!!!

1 comment: