டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும்.
அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா?
உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.
”மறப்போம் மன்னிப் போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது.
அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.
தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும்.
என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க! வாழ்க்கை வாழ்வதற்கே!
good
ReplyDelete